Wednesday, December 15, 2010

தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!

பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை
உச்சநீதிமன்றம் இன்னும் மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது  மீண்டும் நிருபனமாகியுள்ளது. இப்படி சொல்ல காரணம் கடந்த 3ஆண்டுகளாக ஒரு வழக்கு விசாரணைக்கு வராமல் இன்று போய் நாளை வா என்ற கதையாகவே உள்ளது. அந்த வழக்கு, தமிழகத்தில் இயற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்க்கு எதிரான வழக்கு.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்ட பேரவையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகாரகவேண்டும் என்பது பெரியார் கண்ட கனவு. ஆனால் அந்த கனவு அவர் மறையும் வரை நிறைவேறவில்லை. அதுபற்றி அவர் மனம் வெதும்பி நிறைவேறாத ஆசையை என் நெஞ்சில் முள்ளொன்னு குத்தியுள்ளது என வெளிப்படுத்தினார்.
தந்தை பெரியாரின் இதயத்தில் குத்தப்பட்டிருந்த அந்த முள்ளை இன்று தான் நம்மால் எடுக்க முடிந்தது எனச்சொல்லி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய வேகத்தோடு பார்ப்பனர் அல்லாத பிற சாதியினர் சாஸ்திரங்களை கற்றுக்கொள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியை திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, சென்னை, திருச்சி, திருச்செந்தூர் ஆகிய ஆறு ஊர்களில் அமைத்தார். அங்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட கருவறைக்குள் செல்ல மறுக்கப்பட்ட எல்லா சாதியை சேர்ந்த இளைஞர்களும் சேர்ந்தனர். அவர்களுக்கான தங்கும் இடம், உணவு போன்றவற்றை இலவசமாகவே வழங்கியது அரசு.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன சக்திகள் மாணவர்களுக்கு, பயிற்சி ஆசிரியர்களுக்கு தொந்தரவு, மிரட்டல்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடிப்போயினர். திருவண்ணாமலையில் பயிற்சி ஆசிரியராகயிருந்த ராமகிருஷ்ணஜீவா என்கிற பிராமணரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு மறைந்திருந்து தாக்கவும் செய்தனர்.
இதற்கெல்லாம் அசராத அவர் சாஸ்திரங்கள் இந்து சமுகத்தில் உள்ள எல்லா சாதியினம் கற்கும் உரிமை உடையது. பிராமணர்களுக்கு மட்டும் சாஸ்திரங்கள் உரியதல்ல. நான் மற்ற சாதியினருக்கும் கற்று தருவேன் என உறுதியுடன் கற்று தரும் பணியில் இருந்தார். தடைகளை தாண்டி இறுதியில் தமிழகத்தில் 206 மாணவர்கள் பல கட்ட தேர்வுகளை எழுதி அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர்.
இதை கண்டு வயிறு எரிந்த பிராமண சக்திகள் தங்கள் தொழில் பறிபோகிறதே என மதுரையை சேர்ந்த பட்டர்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள், சிவாச்சாரியார்கள் தவிர வேறு யாரும் சாமி சிலையை தொட்டு பூசை செய்ய அறுகதையற்றவர்கள். மற்ற சாதியினர் தொட்டால் கடவுள் கோவித்துக்கொள்வார். ஆகமவிதிப்படி கீழ்சாதியினர் கர்ப்ப கிரகத்தில் நுழைந்தால் கடவுள் கோவிலை விட்டு ஓடிப்போய்விடுவார் எனச்சொல்லி தடை கேட்டார்கள். தமிழக உயர்நீதிமன்றம் தடை தர மறுத்தது.
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தை நோக்கி ஓடினார்கள் கேட்டதும் இடைக்கால தடை தந்தது. இந்த தடையை காரணம் காட்டி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அரசு. தடையை உடைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் மனு செய்தது. இந்த வழக்கில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பிரபல பார்ப்பன வழக்கறிஞர் பராசரன் வாதாடபோகிறார். தமிழக அரசின் சார்பில் எம்.என்.ராவ், மரியஅர்ப்புதம், நெடுமாறன் என 3 பேரை நியமித்துள்ளது. எல்லாம் தயார்; விசாரிக்க வேண்டியது தான் பாக்கி.
ஆனால் வழக்கு தான் விசாரணைக்கு வரவிடமாட்டோம் என தடுக்கிறது சில பூணுல் சக்திகள். பொறுத்தது போதுமென கொதித்தெழுந்த அர்ச்சகர்க்கு படித்த மாணவர்கள் வேலை கிடைக்குமென்று சொன்னதை நம்பி படிச்சி தேர்வெழுதி வெற்றி பெற்றும் சான்றிதழ் தரமறுக்கிறார்களே என நியாயம் கேட்டு போராட்டங்கள் செய்தனர். தங்களது கோரிக்கைகள் வலுவாக வைக்க பயிற்சி முடித்த 206 மாணவர்கள் ஒன்றிணைந்து அர்ச்சக பயிற்சி மாணவர்கள் சங்கம் அமைத்தனர்.
அரசாங்க அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழக்கை சுட்டி காட்டினர். பாதிக்கப்படுவது நாங்களும் தான் என உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட தயாராயினர். மாணவர்களுக்கு உதவ மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்தது.  உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனித உரிமை போராளிகளான வழக்கறிஞர்கள் காளின், காந்தர்ன் வாதாட மனு செய்தனர். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தற்போது வழக்கில் வாதாட அரசு தரப்பும் தயார், மாணவர்கள் தரப்பும் தயார். விசாரிக்க நீதிபதிகளோ, வழக்கை தொடுத்த பிராமணர்களோ தயாரில்லை. அதனால் தான் 3 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு இன்றும் பரிதாபமாக உச்சநீதிமன்ற குப்பை கூடைக்கு அருகில் கிடக்கிறது.
அந்த காகிதம் நீதிபதி முன் வரும் முன்பே அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, பாட்டி செத்து போய்ட்டாங்க, தாத்தா வழுக்கி விழுந்துட்டாரு என பள்ளி பிள்ளைகள் சொல்வதை போல காரணங்கள் சொல்லி வழக்கை தள்ளி வைத்துக்கொண்டே போகிறார்கள். கடைசியாக கடந்த ஏப்ரல் 15 தேதி விசாரணைக்கு வர வேண்டிய வழக்கை தலைமை நீதிபதி விடுமுறை என மே 6 ந்தேதிக்கு மாற்றிவிட்டார்கள்.

வரும் 6ந்தேதியும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிபோகும் நிலைதான். காரணம் மே 11ந்தேதி தலைமை நீதிபதி ஒய்வு பெறுகிறார். அதனால் வழக்கு எடுக்க மாட்டார். அடுத்து வரும் தலைமை நீதிபதி எப்போது இந்த வழக்கில் கவனம் செலுத்துவார் என்பது தெரியாத நிலை தான்.
சங்கராச்சாரியார் வழக்கும் என்றதும் இரவிலும், விடுமுறை நாளிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் திறந்தது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு கல்விச்சாலையில் இட ஓதுக்கீடு தந்தபோது மேல் சாதியினர் எதிர்த்து வழக்கு தொடுக்க கால நேரம் பார்க்காமல் உச்சநீதி மன்ற கதவுகள் திறந்தன. இப்படி பல நேரங்களில் உயர் சாதியினருக்காக நடு இரவில் கூட மனுவை விசாரித்தது.
பிராமணர்களை போல பிற சாதியினர் கருவரைக்குள் நுழைந்து கடவுளை தொடலாம், பூசைகள் செய்யலாம் என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை பூணுல் சக்திகள் பொறுக்க முடியாமல் பிராமணர்களை தவிர வேறு சாதியினர் கடவுளை தொட அறுகதையற்றவர்கள் எனச்சொல்லி தடை கேட்டார்கள். கடவுள் சாதி பார்ப்பதில்லை, மேல்சாதி, கீழ்சாதி எனச்சொல்லி தீண்ட தகாதவர்கள் என சொன்ன பூணுல் சக்திகளை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்திருக்காலம்.   ஆனால் அப்படி எதையும் செய்யாமல் கேட்டதும் இடைக்கால தடை தருகிறது.
இந்த இடைகாலதடை உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவும், விசாரணைக்கு வராமல் இருப்பதற்கும் பிராமணர்கள் மட்டுமல்ல தமிழக அரசும் ஒரு காரணம்.

1970ல் தந்தை பெரியார் தமிழகத்தில் கோயில்களில் நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை கண்டித்து கருவரை நுழைவு கிளர்ச்சி போராட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என அறிவித்தார். அப்போது முதல்வராகயிருந்த மு.கருணாநிதி, அய்யாவை எங்களது அரசு கைது செய்ய முடியாது. அதனால் அவரின் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றார்.
1972ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வாரிசுரிமை அர்ச்சகர் முறையை ஒழித்தார். இந்து சமயத்தில் சாஸ்திரம் தெரிந்தவர்கள் கடவுளுக்கு பூசை செய்யலாம் என்றது அப்போதைய சட்டம். மறைமுகமாக எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றது. இதை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 12 பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்திற்க்கு போயினர். அங்கு தமிழக அரசு போட்ட சட்டம் செல்லும் என்றது 5 பேர் கொண்ட நீதிமன்ற பெஞ்ச்.
உச்சநீதிமன்ற வழக்கின் விவாதத்தில், சாஸ்திரங்கள் தெரிந்தவர்களையே கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிப்போம் என்றார் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கோவிந்தசாமி. உடனே பிராமணர்கள் சார்பிலான வழக்கறிஞர் சாஸ்திரம் தெரிந்தவர்ளையே நியமிப்போம் என்கிறார்கள். வைணவ கோயில்களில் சைவத்தை சேர்ந்தவர்களையும், சைவ கோயில்களில் வைணவத்தை சேர்ந்தவர்களை  அர்ச்சகர்களாக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்கள். உடனே அரசு வழக்கறிஞர் நாங்கள் ஆகமவிதிப்படி நடப்போம் என முரண்பாடான உறுதிமொழியை தந்தார். உச்சநீதிமன்றம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அர்ச்சகர்களின் வாரிசுரிமை முறைக்கு தடை விதித்து அரசின் சட்டத்திற்கு அங்கீகாரம் தந்தது.
38 ஆண்டுக்கு பின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றியபோது, ஆகம விதியை மீற மாட்டோம் என 1972ல் உத்தரவாதம் தந்த தமிழக அரசு இப்போது அதை மீறுகிறது எனச்சொல்லி இடைக்கால தடை வாங்கினார்கள்.
தடை வாங்கிய பின் பிராமண சக்திகள் இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் தடுத்துக்கொண்டுயிருப்பதை தமிழக அரசு நினைத்திருந்தால் ஸ்பெஷல் பெட்டிஷன் தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால் அரசு கடந்த 3 ஆண்டுகளாக மவுனமாகயிருக்கிறது. இதனால் 206 மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை கேள்வி குறியோடு எதிர்நோக்குகிறார்கள்.
இது போன்ற தவறுகள் வாதத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. ஆதில் மாறி வேறு ஏதாவது உறுதிமொழி தந்தால் 100 ஆண்டுகளுக்கு பின்னும் பூணுல் சக்திகள் பிரச்சனை செய்யும்.
தந்தை பெரியாரின் இதயத்தில் குத்திய முள்ளை எடுத்ததாக பெருமை படுத்திக்கொண்ட கலைஞர்,  அந்த இதயத்தில் வழியும் ரத்தத்தை கவனிப்பாரா?

Tuesday, December 14, 2010

ஆலய நுழைவுப் போராட்டம்: அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் அறிவிப்பு


ஆலய நுழைவுப் போராட்டம்: அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் அறிவிப்பு

 

மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் அறிவித்துள்ளார்

.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 
IMG_4823.JPG

தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 240 மாணவர்களும் கோயில்களில் அச்சர்களாக நியமிக்கக் கூடாது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பிற சாதியினர் இதை சரியாக செய்யமாட்டார்கள் என, மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

IMG_4824.JPG
உச்சநீதிமன்றமும் பிற சாதியினர் அர்ச்சகராகும் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு வராமல் தள்ளிப்போடப்பட்டு வருவதால், பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். 


தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் வீதி தோறும் நடந்து சென்று, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி துண்டு பிரசுரகங்கள் மூலம் மக்களிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர் என்றார்.
IMG_4826.JPG
மேலும், மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மதுரை மீனாட்சி அம்மனுக்கும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நாங்கள் பூஜைகள் செய்யப்போகிறோம். இதற்கு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்  


Monday, December 13, 2010

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தாக்கப்பட்ட கொடுமை

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தாக்கப்பட்ட கொடுமை
அர்ச்சகர் பயிற்சியின் போதும் அவமதிப்புகள்
குமுறும் பார்ப்பனரல்லாத இளைஞர்கள்

அர்ச்சகர் பயிற்சி பெறச் சென்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், பயற்சிக் காலத்தில் அவமதிக்கப்பட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டு, கோயில் பணியில் அமர்த்தப்படாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அர்ச்சக இளைஞர்கள் கூறிய தகவல்கள்:
 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை நாங்கள்
100_0549.JPGஅர்ச்சகர்களாக பயிற்சி பெற்றோம். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலும் அர்ச்சகர் பயிற்சி நடந்தது. இங்கே பயிற்சி பெற்றவர் களுக்கு கோயில் தலைமை அர்ச்சகப் பயிற்சியாளர் வேதம், தியான சுலோகம், காயத்ரி மந்திரங்களை கற்றுத் தர மறுத்து விட்டார். ஆகமம் கற்றுத் தரும் ஆசிரியரே வர வில்லை. ஒரு தமிழ்ப் புலவர் மட்டும் தேவாரம், திரு வாசகங்களை கற்பித்தார். பழனி கோயில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் பாலு குருக்கள் என்ற பார்ப்பனர். அவர்தான் பயிற்சி தர வேண்டும். ஆனால், உங்களுக்கு எல்லாம் வேதம், தியான சுலோகங்களையோ அர்ச்சகருக்கான பயிற்சியையோ கற்றுத் தர முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
 திருவண்ணாமலையில் நடந்த பயிற்சியிலும், நாங்கள் அவமானப்பட்டோம். அங்கும் எங்களுக்கு வேதம், ஆகமம் கற்றத்தர பார்ப்பன அர்ச்சகர்கள் மறுத்து விட்டார்கள். வெளியிலிருந்து தாமாக முன்வந்து ஒரு பார்ப்பனர், எங்களுக்கு கற்றுத்தர முயன்றபோது, பார்ப்பன அர்ச்சகர்கள், அவரை உடல் ரீதியாக தாக்கி, வெளியே தள்ளினர். நாங்கள் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றோம். 4 இடங்களில் சைவப் பயிற்சியும், 2 இடங்களில் வைணவ பயிற்சியும் நடந்தது.
 எழுத்துத் தேர்வு மட்டுமின்றி, நேர்முகத் தேர்வும், அதற்கு மதிப்பெண்ணும் உண்டு. அற நிலையத் துறை ஆணையர், உதவி ஆணையர் ஆகிய அதிகாரிகளோடு, பழனி தலைமை அர்ச்சகரான பாலு குருக்கள், நேர்முக தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, பார்ப்பன குருக்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது பார்ப் பனர்களைப் போன்ற தோற்றத்துடன் தான் வரவேண்டும் என்பது கட்டாயம். காதில் கடுக்கண், தலையில் குடுமி, முதுகில் பூணூல் அணிந்து, மீசையில்லாமல் வரவேண்டும். அதிலும்கூட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 16 பேருக்கு பூணூல் அணியவும் தடை விதித்தார்கள்.
 “நீங்கள் எந்த பூசையும் செய்ய வேண்டாம். சர்க்கரைப் பொங்கல் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவே போதும்என்று பழனி பார்ப்பன அர்ச்சகர் கூறினார். இவ்வளவு அவமானங்களைச் சுமந்து, நாங்களே, எங்கள் முயற்சியால், எங்களை தகுதியாக்கிக் கொண்டோம். ஆனாலும், பணி நியமனம் இல்லாமல் திண்டாடுகிறோம். தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத் தடையை நீக்கும் முயற்சி களில் மெத்தனம் காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தில் நாங்களே சங்கத்தின் வழியாக நிதி திரட்டி எதிர் வழக்காடி வருகிறோம்” - என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள், இந்த இளைஞர்கள்.
 செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. அரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் திருவண்ணா மலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் அரங்கநாதனை தாக்கி உள்ளனர். இது குறித்து வா. அரங்கநாதன் நடந்த சம்பவங்களை விளக்கி, கழக ஏட்டுக்கு விடுத்துள்ள செய்தி:
IMG_4827.JPG “நான் தமிழக அரசு நடத்திய அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் திருவண்ணாமலையில் படித்து முடித்துள்ளேன். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த 207 மாணவர்களுக்கும் பணி நியமனம் செய்யப்பட வில்லை. எனவே, மாநில அளவில் அனைத்து மாணவர் களையும் திரட்டி, சங்கம் அமைத்து நடத்தி வருகிறோம். இந்த நிலையில் மதுரையைச் சார்ந்த பார்ப்பன பட்டர்கள் எங்களை பணி நியமனம் செய்யாதிருக்க உச்சநீதிம ன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தமிழக அரசு எங்களை பணியமர்த்தவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் வழக்கை எதிர்கொண்டு வருகிறோம். சங்கத்தின் சார்பாக போராட்டங்களையும் நடத்தி வருகின்றோம். இதனால் ஆரம்பத்தில் இருந்தே இந்து முன்னணியினர் பார்ப்பனர்களுக்கு எதிராக பேசக் கூடாது என எச்சரித்து வந்தனர்.
 பெரியார் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 அன்று திருவண்ணாமலையில் காலை 9 மணியளவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும் அர்ச்சகர்களாக வேண்டும் என போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இரவு வரை நகரின் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் எங்கள் பணி நிய மனத்திற்கு தடையாக உள்ள உச்சநீதிமன்ற வழக்கை தமிழக அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி துண்டறிக்கைகளை வழங்கி வந்தோம். அன்று இரவு 8.30 மணியளவில் அண்ணாமலையார் கோவில் வாயிலின் அருகில் நானும் மனித உரிமை பாதுகாப்பு மய்ய வழக் கறிஞர்களும் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்து முன்னணியின் நகர செயலாளர் இளமாறன் உட்பட ஐந்து பேர், “ஏண்டா கிறித்துவ பசங்களை கூட்டி வந்து நோட்டீஸ் கொடுத்து பிரச்சினை செய்ய பார்க்கிறியாஎன கேட்டார். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து முன்னணி யினர் என்னைப் பார்த்து தொடர்ந்து நீ பிராமணர்களுக்கு எதிராக பேசி வர; நீ என்ன கதி ஆவர பார்என எச்சரித்தார். ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டினார்
.
 இதற்கிடையில் 14.10.2010 இரவு 9 மணியளவில் கோயிலுக்குள் நாங்கள் இருந்தபோது இந்து முன்னணியைச் சார்ந்த காமராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் என்னைப் பார்த்து, தெவிடியா பையா நீ தானே பெரியார் சிலைக்கு மாலை போட்டவன். நீ ஏன்டா பார்ப்பானாக பாக்குற, பெரியாரு நாட்டைக் கெடுத்தார். நீ திருவண்ணா மலையை கெடுக்க பார்க்கியா. உன்னால எங்க கட்சியில எங்களுக்கு நெருக்கடி. இனிமேல் சங்கம் சார்பில் ஏதாவது பண்ணிப் பாரு. கோவில் வாசலிலேயே வெட்டுப்பட்டு சாவ என்று திட்டி, கழுத்தை நெரித்து, முதுகில் தாக்கினார்.
 நான் தனி ஆளாக இருந்ததால் எதையும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டேன். இந்து அமைப்புகள் எங்க சங்க செயல்பாடுகளால் காழ்ப்புணர்ச்சி கொண்டு என்னையும், சங்க மாணவர்களையும் எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர். எதிரிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. இவர்களுக்கு பின்னணியில் பார்ப்பனர்கள் உள்ளனர் என உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.
 ஆண்டவனைமறுத்து ஆள்கிறவரை நம்பும் அர்ச்சகர்கள்
 தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட 38000 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள், 6 வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்கக் கோரி, வேலை நிறுத்தம் செய்துள்ளனர். கோயில்களில் அன்றாட தெய்வத் திருப்பணிகளானஅர்ச்சனைகள், பூசைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பிறகு, தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக உடன்பாடு ஏற்பட்டு, வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாம்.
 கோரிக்கைகளை பகவான்களிடம் முறையிடுவதில் எந்தப் பயனும் கிடைத்து விடாது என்பது அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு  நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆண்டவன் திருப்பணிகளையே நிறுத்திக் கொண்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஏமாந்து போன பக்தர்கள்தான் அர்ச்சனைத் தட்டில் காசைப் போட்டு, ‘பெயருக்கும்’, ‘ராசிக்கும் அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்யுமாறு கேட்கிறார்கள்.
IMG_4828.JPG அர்ச்சகர்களோ, தங்களது கோரிக்கையை அரசிடம் வைக்கிறார்கள். அர்ச்சகர்களே; உங்களுக்கே
கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இது தெய்வ நிந்தனை ஆகாதா?” என்று எந்த வைதீகப் பார்ப்பனரும் கேட்கவில்லை. ஆயுதபூசையை நிறுத்தச் சொல்வது கடவுள் உணர்வைப் புண்படுத்து வதாகும் என்று கூப்பாடு போடும், இந்த முன்னணியினரும் கண்டிக்கவில்லை.
 கருப்புச் சட்டையுடன் மோதுவதற்கு முன்பு, கருவறைக்குள்ளேயிருந்தே கடவுளுக்கு எதிராகக் கலகக் குரல் கேட்கிறதே; அதை செவிமடுப்பார்களா, இந்த கடவுள் போலீஸ்காரர்கள்’?

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 
IMG_4836.JPGஅனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்துக்கு எதிரான தடையாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கத்தினர் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
IMG_4888.JPGஅனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்காக சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.  இதில் 206 பேர் சேர்ந்து பயிற்சியும் பெற்றனர். ஆனால் மதுரையைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.இதனால்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசால் வேலைவாய்ப்பு தர முடியவில்லை. எனவே,
100_1818.JPGஇப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்துக்கு எதிராக உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் வ.அரங்கநாதன் தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.dinamani.com/edition/print.aspx?artid=209841

Sunday, December 12, 2010

வீடு புகுந்து அடிப்போம்: சொன்னதை செய்த இந்து முன்னணியினர் !

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சக பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
IMG_5020.JPG

அந்த பயிற்சி நிலையங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட 260 மாணவர்கள் பயிற்சியை முடித்தனர். அதனால் இவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கக்கூடாது என மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இதனால் அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் தங்களை அர்ச்சககர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டும், தொடர்ந்து அர்ச்சக பயிற்சிப்பள்ளியை நடத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்களது கோரிக்கை வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 6 அர்ச்சக பயிற்சி மாணவர்களூம் இணைந்து தமிழ்நாடு அர்ச்சக மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் துண்டு பிரசுரங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Rangan 1.jpg
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனை பொதுமக்களூக்கு தெரியப்படுத்த தமிழகம் முழுவதும் துண்டுபிரசுரங்களை கொடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களூக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் முன்பு நின்றபடி அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ரங்கநாதன் தலைமையில் மாணவர்கள் துண்டு பிரசுரங்களை தந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகிகள் எங்களூக்கு எதிர்ப்பாக போராட்டம் இனியும் செய்தால் வீடு புகுந்து அடிப்போம் என எச்சரித்துள்ளனர்.

100_1834.JPGஇதையடுத்து அர்ச்சக மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் பாண்டியனிடம் புகார் தெரிவித்தனர். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் நேற்று மாநிலத்தலைவர் ரங்கநாதனை பேருந்து நிலையம் அருகே அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டதால் தப்பிவிட்டனர்.
பின்னர் ரங்கநாதனின் வீட்டிற்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார் ரங்கநாதன்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?


தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

அரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.

(Source:- http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/)

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!

பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு மதுரை பார்ப்பன அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதும் அதனால் தி.மு.க அரசு ஜகா வாங்கியது குறித்தும் முன்னர் நிறைய எழுதியிருக்கிறோம். தொடர்புடைய கட்டுரைகளை கீழே வாசிக்கலாம்.

அதை எதிர்த்து திருவண்ணாமலை பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் படிப்பு படித்த அனைத்து சாதி மாணவர்களையும் அணிதிரட்டி ம.உ.பா.மை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே அவர்களை சங்கமாக்கியதோடு இந்த சமத்துவ போராட்டித்திற்காக விடாதும் போராடி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான பெரியார் சிலைக்கு அர்ச்சக மாண்வர்கள் மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றிருக்கிறது. பெரியார் கண்ட சமத்துவம் கோவிலில் வருவதற்கு இது முன்னோட்டம் என்பதோடு ஆலயத்தில் தொழில் செய்யும் அர்ச்சகர்கள் சமூகத்தோடு சமமாய் இரண்டறக் கலப்பதற்கும் இது உற்சாகமளிக்கும் செய்தி.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்கள்!!

________________________________________________________________________________________

இது தொடர்பாக ம.உ.பா.மை வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்னைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது; அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.

இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மாணவர்கள் சார்பில் நாங்களும் வழக்கு தரப்பினர்களாக சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம் ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!

அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில்
இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி, மிரட்டி கோயில் கருவறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரியார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்துக்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை, வரதராஜ பெருமாளின் கண் முன்னாலேயே போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்; ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான். ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.

போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா? பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்? ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள். இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.

இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம். ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம். ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.

இதற்கு எதிராகத்தான் அன்று பெரியார் குரல் எழுப்பினார். இன்று நாங்கள் போராடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம். ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு கடந்த 4
ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள
தடையாணையை நீக்க விரைந்து நடவடிக்கை எடு!
ஆலயங்களில் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்

_________________________________________________________

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164


(Source:- http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/)

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!

இந்து முண்ணனி குண்டர்களால் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன்

இந்து முண்ணனி ரவுடிகள் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன், மருத்துவமனையில்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.

மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.

இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.


(Source: http://www.vinavu.com/2010/10/25/ranganathan-attacked/)

கருவறைக்குள் தடுக்கப்படும் அர்ச்சகர்கள் !

100_1087.JPGதமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பணி நியமனம் கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
அடுத்தகட்டமாக ஆலய கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு 
சாதியைச் சார்ந்தவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சியளிக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் அரசின் சார்பில் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அர்ச்சகர்களுக்கே தூர தரிசனமா?
Image0084.jpgஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால தடைகாரணமாக, இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு இதுவரை தமிழக அரசு பணி நியமனம் அளிக்கவில்லை.
பயிற்சி முடிந்து இரண்டு ஆண்டுகளான பின்னரும் தங்களுக்கு அர்ச்சகராக பணியளிக்கப்படாததை கண்டித்தும் தங்களுக்கு வேலை தரக்கோரியும் பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் வெள்ளிக் கிழமையன்று தமிழ்நாட்டின் 
கோவில்கள் சிலவற்றுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
archa.jpgஅர்ச்சகர்களுக்கே தூர தரிசனமா? இந்த போராட்டம் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வ அரங்கநாதன், கோவில்களின் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை நீங்கினால்தான் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால், அதை நீக்கும் வரை தங்களின் போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்தார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த தமிழ்நாட்டின் இந்து அறநிலையத் துறை ஆணையர் பி ஆர் சம்பத், உச்சநீதிமன்றத்தின் தடையாணை இருப்பதால் அவர்களை பணி நியமனம் செய்யமுடியவில்லை என்று கூறியதுடன், அந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகே இதில் தமிழக அரசு தனது அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100917_tnpriestsdemandentry.shtml)

Sunday, March 28, 2010

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!



அறிமுகக் குறிப்பு: அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.



இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்த பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான் அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் தி.மு.க அரசின் சதிகளை விளக்கும் வண்ணம் தொடர் பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இங்கே அதை ஒட்டி சமீபத்தில் மதுரையில் அந்த அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தை ம.உ.பா.மை நடத்தியது. அதன் பதிவு கீழே தரப்படுகிறது.

___________________________________

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மதுரையில் 10.3.2010 புதன்கிழமை காலை 9.00 மதி முதல் 5.00 மதி வரை மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் சற்றும் கலையாமல் அமர்ந்திருந்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 29 பேர் அர்ச்சகர்களாகவே கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிதம்பரம் நடராசர் கோவிலை மக்கள் சொத்தாக்கியதைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் பிற போராட்ட அமைப்புகளும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய ராஜூ “அரசியல் சட்டம் 17வது பிரிவு தீண்டாமை குற்றம் என்று கூறுகிறது. ஆனால் ஆலய கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் நுழைய முடியாது என்ற தீண்டாமை இருந்து வருகிறது. அரசியல் சட்டமா? ஆகம விதிகளா? என்று கேள்வி எழும்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? சட்டப்படி போராடி தீர்வு கண்டாலும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினரை நுழைய அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிதம்பரம் போராட்ட அனுபவம் உணர்த்துகிறது. எனவே மக்கள் இந்த கோரிக்கைக்கு பெருவாரியாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டம் வெல்லும்” என்று வலியுறுத்தினார்.

உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட அர்ச்சக மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மேடைகளில் பேசிப் பழக்கமில்லாதவர்கள் மந்திரம் மற்றும் பாடல் வடிவங்களில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.

“வேதம், ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது வருகிற கடவுள் நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகின்றார்கள். ஆகம விதிகளின் படி தலைவழுக்கையாக இருந்தால் கூட அர்ச்சகராக இருக்க தகுதியில்லை. திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டும் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும். ஊனம் இருக்கக் கூடாது. பத்துவிரல்களுக்கு மேலோ, கீழோ இருக்கக் கூடாது.”

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் ஆனந்தன் பார்ப்பனர்களைப் போலவே தோற்றத்தில் இருந்தார். ஆனால் பூணூல் மட்டும் இல்லை. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மிக அழகாக, துல்லியமாக மந்திரங்களை ராகத்துடன் அவர் பாடிக் காட்டி இது எந்த வகையில் பார்ப்பனர்களின் திறமைக்கு குறைவானது என்று கேட்டார்.

மேலும் “படித்து அர்ச்சகராகி நமது பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை வாழுமென்று எதிர்பார்த்த பெற்றோர்களும், நாங்களும் இப்போது வேறு வழியில்லாமல் திகைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைப்படுகின்றனர். இதற்கு யார் காரணம். உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலே, தகுதியில்லாமலே அர்ச்சகர்களாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள், முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இந்த வேலையை செய்யாமலிருந்திருக்கலாம். அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று பெயரளவில் செய்து விட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.” என்றும் குமுறினார்.

மாணவர் சங்க பொருளாளர் திரு.சண்முகம் பார்ப்பனர்களின் பகல் வேசத்தை தோலுரித்துக் காட்டினார். “தன்னை ஒரு பூஜைக்காக அழைத்துச் சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். ஹோமம் ஆரம்பிக்கும் முன் ஒரு சரம் பான்பராக்கை எடுத்து எனக்கு இரண்டு கொடுத்தார். எனக்குப் பழக்கமில்லை என்று சொன்னேன். அவரோ இதைப் போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன்னார். ஆறிப்போன காப்பியை ஹோமத்தில் சுடவைத்து குடித்தார். மறு நாள் காப்பி வரவில்லை என்பதால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை எடுத்து ஹோமத்தில் வைத்து காப்பி போட்டுக் குடித்தார். இது தான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம்.” என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாக பாடி, தான் எத்தனையோ திருமணங்கள் மற்றும் கிரகப்பிரவேசங்கள் நடத்தி வைத்திருக்கிறதாகவும் அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தள்ளியா வைத்துவிட்டார் என்று வினா எழுப்பினார்.

மாணவர்கள் சிலர் “பள்ளியில் பயிற்சி பெறும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தோம். எவ்வளவு நம்பிக்கையோடு கல்வியை கற்றோம். அத்தனையும் பார்ப்பனர்களுடைய சாதி வெறியினாலே தகர்க்கப்பட்டு விட்டது. அதற்கு சட்டமும் துணை நிற்கிறது” என்று மனம் வருந்தினர். மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர விடாமல் பல்வேறு வேண்டாத சக்திகள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மதுரை மாணவர் மாரிமுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் நாங்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தார்.

பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினர் நுழையக்கூடாது. தாங்கள் அழைக்கும் போது மட்டுமே கடவுள் வருவார் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பிள்ளைகளையெல்லாம் கலெக்டர், செக்கரட்டரி, வங்கி மேலாளர், தொழில் அதிபர்கள் ஆக்கிவிட்டு சொகுசாக வாழ்கின்றனர். பார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பார்ப்பனர்களின் வாரிசுகள் கடல் கடந்து கண்டம் கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். பிற சாதியினர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று சொல்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்து நீங்கள் கருவறையைத் தவிர வேறு எங்கும் வரக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அர்ச்சகர் வேலையைத் தவிர வேறு வேலை கிடையாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? எல்லா இடத்திலும் அவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நமக்கெல்லாம் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது எந்த வகையான நீதி?

சாதி, தீண்டாமை, அர்ச்சகராகுவதற்கான தடை, தங்கள் மூலமாக மட்டுமே கடவுள் வருவார் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் பார்ப்பனியமே காரணம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே. ராமசாமி பேசும் போது “நித்யானந்தா, சங்கராச்சாரி போன்றவர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள்தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினுடைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் கடவுளுடைய அவதாரம் என்று சொல்வதும் உத்தமன் என்று சொல்வதும் பொய். பார்ப்பனர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏமாற்று வேலை. நான் ஒருமுறை கோவிலுக்குச் சென்ற போது அங்கே அர்ச்சகர் இல்லை. அர்ச்சகர் இதோ வருவார் அதோ வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அர்ச்சகர் வந்த பாடில்லை. பொறுமை இழந்த நான் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வேன் எனக்கு எல்லா மந்திரங்களும் என்று கூறி கருவறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். அதற்குள் பட்டரை அழைத்து வந்துவிட்டார்கள். சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயரா என்று நான் சவால் விட்டேன். மதுரையிலுள்ள திருப்புகழ் பக்த சபையை கட்டிக்காத்தவர்களிலே நானும் ஒருவன்” என்று கூறினார்.

குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனுர் கிழார் அவர்கள் “வடநாட்டு கடவுளர்களையும் கந்த சஷ்டி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு. நம்மை அறியாமலேயே கொண்டாட வைத்து விட்டார்கள். விநாயகன், ராமன், கிருஷ்ணன், ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் தமிழர்களுக்குரியதே இல்லை” என்று அடித்துக் கூறிய அவர் சைவ சித்தாந்தம் பற்றி அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை மேடையில் அறிமுகம் செய்து பலரும் அதை வாங்கி சென்றார்கள்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் திரு.கி.மகேந்திரன் கி.மகேந்திரன் பேசியது : “1970ல் தந்தை பெரியார் கர்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாபிதி இதற்காக நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். என்னுடைய அரசு அதற்கான சட்டம் ஒன்றினை இயற்றும் என்று கூறினார். கர்ப்பக்கிரகத்துக்குள் நிற சாதியினர் நுழைய முடியாத பிலை என்னுடைய நெஞ்சிலே தைத்திருக்கின்ற முள் என்று கூறினார். பெரியார் மறைந்த போது பெரியாரின் நெஞ்சிலே தைத்த முள்ளோடு அவரை நான் புதைக்கும்படியாக ஆகிவிட்டது என்று கருணாநிதி கூறியதை” கருணாநிதிக்கு நினைவுபடுத்தினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சின்ன ராஜா, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனாதாத்தள பிரமுகர் வேலுச்சாமி, ம.க.இ.க தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு தோழர் குருசாமி, பு.ஜ.தொ.மு.தோழர் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள் சிலரும், தனிநபர்களும், தாங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும் நேரமின்மையின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை. மாலை 5.15 மதியளவில் குமுடி மூலை ஆறுமுகசாமி அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார். அனைத்து ஊடகங்களும் செய்தி சேகரித்துச் சென்றன.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் அர்ச்சக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “”"”வாழ்மிகு வராது பொய்க மதிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க”" என்ற பெரியபுராண பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டம் முடிக்கப்பட்டது.


(Source:- http://www.vinavu.com/2010/03/15/hrpc-case-2/)

இப்படிக்கு,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு (APPSA - TN)
அலை பேசி எண்: +91 90474 00485