அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்-தமிழ்நாடு
Tuesday, July 14, 2020
அர்ச்சக மாணவர் பணிநியமனம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் - தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE - TAMILNADU)
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு
TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS
150-E, K.K.NAGAR, MADURAI-20,
98653 48163, 90474 00485.
+++++++++++++++++
நாள்:14.07.2020
அர்ச்சக மாணவர் பணிநியமனம் - பத்திரிக்கை செய்தி
தமிழகத்தில் அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற “அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 206 பேர் உள்ளனர்.இவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணிநியமனத்தை எதிர்பார்த்து பல்வேறு கட்ட சட்ட மற்றும் களப் போராட்டங்கள் நடத்திவந்த சூழலில் தற்போது தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது.உரிய கல்வி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் தியாகராஜன் பணிநியமனம் பெற்றுள்ளார்.
ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.
அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது.
அதற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி - தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.
பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.
பணிநியமன நிகழ்வு இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ - வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.
எனவே,
தமிழக அரசிடம் !
எஞ்சிய 203 மாணவர்களுக்கும் உடனே பணி வழங்கு!
மூடப்பட்ட சைவ வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறந்து நடத்து
பெண்களையும் அர்ச்சகராக்கு!
என்று கோருகிறோம்.
-------------------------------------
வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
வா.ரங்கநாதன்,
தலைவர்,

Tuesday, November 19, 2019
பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!
பெண் பக்தையை தாக்கிய
தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !
ஒரு ஐம்பது வயதுமிக்க பெண்மணி ஒருவர் ஒரு தீட்சிதனுடன் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த தீட்சிதன் தன்னை அடித்ததையும், தான் அவனது தங்கச் சங்கிலியைப் பறிக்கப் போனதாக்தான் அடித்ததாக அவன் பொய் சொல்வதையும் சக பக்தர்களிடம் உடைந்து போய் விவரிக்கிறார் அந்தப் பெண்மணி. அங்கு சூழ்ந்துள்ள பக்தர்கள் அந்த தீட்சிதனை சூழ்ந்து கேள்வி கேட்கிறார்கள். ஆனால் எவ்விதப் பதட்டமும் இல்லாமல் திமிராக அமர்ந்து தனது கதையையே திரும்பத் திரும்பச் சொல்கிறான் அந்த தீட்சிதன்.
தனது மகனின் பிறந்த நாளில் அவரது பெயருக்கு அர்ச்சனை செய்ய சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருக்கிறார், சிதம்பரம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்மணி லதா. தனது மகனின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சதர் தர்ஷனிடம் கூடையை கொடுத்திருக்கிறார். கூடையை எடுத்துச் சென்று அதிலிருந்த தேங்காயை உடைத்து கொண்டு போன சீக்கிரத்தில் திரும்பி வந்து கொடுத்திருக்கிறார் தீட்சிதர் தர்ஷன்.
“அர்ச்சனை பண்ண சொன்னா, பேரு, நட்சத்திரம் எதுவும் சொல்லாம தேங்காய மட்டும் உடச்சி கொண்டுவந்து தர்றீங்க” என்று கேட்டிருக்கிறார் லதா. அதற்கு “அப்படி பண்ணனும்னா நீங்களே பண்ணிக்கோங்க” என்று திமிராக பேசியிருக்கிறான் அந்த தீட்சிதர். தீட்சதனின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் “ அப்புறம் எதுக்கு நீங்க இருக்கீங்க? ” என்று கேட்க, பார்ப்பனக் கொழுப்பெடுத்த அந்த தீட்சதன் தர்ஷன் ஒரே அடியாக அந்த பெண்மனியின் கன்னத்தில் அறைந்திருக்கிறான். அந்த பெண்மனியோ சுருண்டு கீழே விழுந்திருக்கிறார்.
அருகில் இருந்த பக்தர்கள் இச்சம்பவத்தைக் கண்டு உடனடியாக நெருங்கி தீட்சத ரவுடி தர்ஷனை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அந்த தீட்சிதன் “என் செயினை அறுக்க வந்தாங்க.. அதனால தான் அடிச்சேன்” என்று கொஞ்சமும் நா கூசாமல் அபாண்டமான பொய்ப் பழியை அந்த பெண்ணின் மீது சுமத்தினான். ஆனால் உண்மையை அருகில் இருந்த வேறொரு பக்தர் போட்டுடைக்க, தீட்சிதன் பொய் சொன்னது உறுதியாகத் தெரிந்ததும், வாக்குவாதம் அதிகமானது.
இதையடுத்து லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவத்தையும் அது சமூக வலைத்தளங்களில் பரவுவதையும் அறிந்த சிதம்பரம் நகர போலீசு ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று லதாவிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையில் கோயிலில் நடந்தது குறித்து லதா புகார் அளிக்க, தீட்சித ரவுடி தர்ஷன் மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண்கள் மீதான வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போலீசு தீட்சிதன் தர்ஷனைக் கைது செய்யவில்லை. தீட்சிதன் அன்று வீடு திரும்பவில்லை என்றும், தலைமறைவாக உள்ளதாகவும் அவனைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வகையான “நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையெல்லாம்”, எஸ்.வி.சேகர் எனும் பொறுக்கியைக் கைது செய்யாமல் அவனை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி, அவனுக்குப் பாதுகாப்புக் கொடுத்து அவன் கூடவே போலீசு சுற்றிம்போதே நாம் கேட்டுள்ளோம்.
அதற்கு முன்னால், எச்ச ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தை, “ஹைகோர்ட்டாவது ம#$ராவது” என்று பேசிய பின்னரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் கோர்ட் கைவிட்டது. இரண்டு பார்ப்பன நரிகளுக்கும் சலுகை வழங்கிய போலீசும் நீதிமன்றமும், சிதம்பரம் கோவிலின் கொழுப்பேறிய திருட்டு தீட்சிதனுக்கு மட்டும் தண்டனை பெற்றுத் தந்துவிடுமா என்ன ?
உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது. கோவிலுக்குள் தமிழ் மொழியில் தேவாரம் பாடக் கூடாது என்று கொக்கரித்த போதே இந்தக் கும்பலை கோவிலை விட்டு அடித்து வெளியேற்றியிருந்தால், இன்று இந்நிலை ஏற்பட்டிருக்குமா ?
Chidambaram Natarajar Kovil Issue / பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!
சிதம்பரம் நடராசர் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற பெண்ணை தீட்ச்சதர் தாக்கியதற்கு கண்டனம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற சட்டத்தில் 2 ஆண்டு காலம் பயிற்சி முடித்து பார்ப்பன சூழ்ச்சியால் பணி செய்ய முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ச்சர்கர் மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன் தனது கண்டனத்தை பதிவு செய்கிறார்.
Friday, October 25, 2019
உண்ணாவிரத போராட்டம்
பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
https://timesoftamilnadu.com/2019/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D/
பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
Saturday, August 4, 2018
“கழகச் செயல் தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு"
*“கழகச் செயல் தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு"*
இன்று (02-08-2018) கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்ற சட்டத்தினை தலைவர் கலைஞர் அவர்கள் பிறப்பித்ததன் விளைவால் சமீபத்தில் மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Sunday, October 15, 2017
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
பத்திரிக்கை செய்தி
நாள் : 12.10.2017
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதே நேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 -ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007 -ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள்.
பயனில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற போதிலும், அதிமுக அரசு மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத ஒரேயொரு குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைக்கம் சென்று போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.
2006 -ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள். 1972 -ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். “தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும்” என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மத நம்பிக்கை என்ற பெயரிலும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
“பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது” என்று சாமர்த்தியமாக வாதிடுவதன் மூலம் தங்களது சாதி – தீண்டாமை வெறியை இவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதை காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்று சாதியை தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.
கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், நடராசர் கோயில், அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பன உட்சாதியினர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, “வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது” என்று தெளிவாக கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174 -ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான்.
மேலும் 411 பேர் அவர்களால் சிபாரிசு மூலம் நுழைந்தவர்கள். அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலி கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால் தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது.
மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும்.
ஆனால், “ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை” என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று “கோயிலே தங்களுக்கு சொந்தம்” என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.
அர்ச்சகர்களும் சங்கராச்சாரிகளும் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் “மரபு” என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையேற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். “பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்பதும் அத்தகையதொரு மரபு.
ஒழிக்கப்படவேண்டிய தீண்டாமை மரபு. 1969 -ல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி தீண்டாமை ஒழிப்புக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 1971 -ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தையும், 2006 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் திரு.கருணாநிதி கொண்டுவந்தார்.
இதற்கு எதிரான வழக்கில், 2015 -ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தந்திரமான முறையில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25 -ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26 இன்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.
“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்ள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது” என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்த போதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.
தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளத்து பார்ப்பன அர்ச்சகர்ளுக்கும் சாதகமானதுதான். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு போகாமலிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை என்பதே இந்த மாணவர்களின் அவல நிலைக்கு மிக முக்கியமான காரணம்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்ற போதிலும், அது பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.
இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்கு தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி – தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொருந்தும்.
206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்குப் பொருள், “பார்ப்பனரல்லாதார் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும்” என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் கருத்துக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்பதுதான்.
அதனை முறியடிக்க தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் வைக்கம் வீரருக்கு நாம் செலுத்தும் மரியாதை. தமிழ் மக்கள் என்ற முறையில் அப்படிப் போராடுவதொன்றுதான் நமக்கு சுயமரியாதை! இது அர்ச்சக மாணவர்களின் பிரச்சினை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை.
பங்கேற்றோர்
- திரு. சி.ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
- திரு. சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
- திரு. சு.மில்ட்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
- திரு. அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
- திரு. பாலகுரு, திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
- திரு. திருமுருகன், திருவல்லிக்கேணி அர்ச்சகர் பயிற்சி பள்ளி
- திரு. வெங்கடேசன், திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி
இவண் :
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
அலுவலகம்: 150-இ,
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.
அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
சென்னை
சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.
ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது.
இது தொடர்பான வீடியோவை வெகு விரைவில் வெளியிடுகிறோம்.
உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!

https://www.youtube.com/watch?v=FUQLPIF-ByE

https://www.youtube.com/watch?v=FUQLPIF-ByEஅனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சிதம்பரம் அனந்தம்மாள் சத்திரத்தில் 23-01-2016 அன்று “ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ம.உ.பா.மைய கடலூர் மாவட்ட துணை செயலர் சி. செந்தில் கூட்ட்த்துக்கு தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் தாழை. கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், ம.உ.பா.மைய மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில் குமார் ஆகியோர் “இந்தத் தீர்ப்பு எத்துணை மோசமானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது” ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.அரங்கநாதன், மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் பாலகுருஆகியோர் இந்த வழக்கு நடந்த காலத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏற்படுத்தியுள்ள மன உளைச்சலையும் வெளிபடுத்தினர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்பேசியதாவது : “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும், சரத்து 14- சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்றும், சரத்து 16- சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பாகுபாடு பார்க்க்க்கூடாது என்றும் கூறுகின்றன. இதற்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதைத்தான் செய்தது.
- அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்ப்பது அரசு, மக்களின் கடமை என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 51-க்கு அதை மீறி புராண கட்டுக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு உச்சநீதிம்னறம் சேது சமுத்திர திட்டம் வழக்கில் தீர்ப்பு வழ்ங்கியுள்ளது. அந்தத் திட்டம் இப்போது மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படுகிறது.
- ஒரே சட்ட்த்தையும், சாட்சிகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஜெயல்லிதாவை குன்ஹா தண்டிக்கிறார், குமாரசாமி விடுவிக்கிறார்.
- இந்திய கூட்டுமனசாட்சிக்கு திருப்தியளிக்கும் வகையில் சாட்சிகள் இல்லாதபோதும் அப்சல் குருவுக்கும், யாகூப் மேமனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்து. ஆனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை, தாழ்த்தப்பட்டவர்களை கொன்ற இந்து மதவெறியர்கள், ஆதிக்க சாதி வெறியர்கள் யாருக்கும் இது வரை தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்தில்லை.
இது தான் இந்திய அரசியல் சட்ட்த்தின் இரட்டைத் தன்மை. அர்ச்சகர் தீர்ப்பிலே கூட அப்படிபட்ட நயவஞ்சகமான இரட்டை தன்மைதான் எச்.ராஜா, இராம.கோபாலன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி என இரு எதிர் கருத்து உள்ளவர்களையும் இத்தீர்ப்பை வரவேற்க செய்கிறது. உண்மையில் இந்தத் தீர்ப்பு சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு போராடுபவர்களுக்கு 100% தோல்வி தான். 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்பில் ஆகமப்படி தான் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்பது உட்கிடையாத்தான் சொல்லப்பட்ட்து. ஆனால் இன்று 40 வருடங்கள் கழித்து இன்று இந்த தீர்ப்பில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில்களின் நடைமுறையை முன்னிறுத்தி ஒவ்வொரு நியமனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடரலாம் எனக்கூறியதன் மூலம் இந்த பிரச்சினையை இன்னும் 40 வருடங்கள் இழுக்க்கடிக்கும் திட்டமிட்ட சதி இது.
இந்த வழக்கில் முக்கியமானது 206 அர்ச்சக மாணவர்களின் வேலைவாய்ப்பல்ல, கருவறை தீண்டாமையை ஒழிப்பது தான் முக்கியமானது. அது நிறைவேறியிருக்கிறதா? என்றால் இல்லை. அதற்கு நேர் எதிராக கருவறை தீண்டாமை சரி என்றே தீர்ப்பு கூறியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பின் அடிப்படை இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உள்ள தனிமனித உரிமை, மத நிறுவனங்களின், மதங்களின் உரிமை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அவற்றுக்கிடையே முரண்பாடு வரும்போது மத நிறுவனங்களின், மதங்களின் உரிமையே மேலானது என நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது மத சார்பற்றது அல்ல. அதை மதசார்பற்றதாக மாற்ற K.P.ஷா உள்ளிட்டவர்கள் கொண்டுவர முயன்ற திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. பின்னர் இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் 42வது சட்ட்த்திருத்த்த்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டதே. இங்கு இந்து மத ந்டவடிக்கைகளை அரசே ஊக்குவிப்பது நடந்து வருகிறது. அது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 48-ன் படி நடக்கிறது. மேலும், நீதிபதிகள் அதிகாரத்தில் உள்ளவர்களின்
மனநிலைக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இந்த நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். அவர்கள் கூறுவதே சட்டமாக கருதப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் பார்ப்பனிய சிந்தனையை கொண்ட நீதிபதிகளை நியமிக்கும் RSS –பார்ப்பன நிதிபதிகளின் முயற்சியை தடுத்த தமிழக வழக்கறிஞர்களின் போராட்டமும், பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் தமிழக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களும் தான் 42 வழக்கறிஞர்கள் இடைநீக்கம், உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்கறிஞர்களின் மீதான அடக்குமுறை ஊழல் நீதிபதிகளுடன் கரம்கோர்த்து பார்ப்பன நீதிபதிகளின் நட்த்திய திட்டமிட்ட அடக்குமுறையே. இது வழக்கறிஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.நீதிமன்றம் மட்டுமல்ல பல்கலைகழகம், அறிவியல் கழகங்கள், உயர் அதிகார பீடங்கள் அனைத்தையும் கைப்பற்றும் RSS- BJP யின் சதியின் ஒரு பகுதி.
இந்த பார்ப்பன பாசிச அபாயத்தை எதிர்த்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராடி முறியடிக்க வேண்டியுள்ளது.
மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.ராஜூ
“தீண்டாமையை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்ட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் அதை பார்ப்பன உச்சநீதிமன்றம் செல்லாக்காசாக்கி விடுகிறது. அப்படித்தான் 1972-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு போட்ட அரசாணையை செயலிழக்க செய்துள்ளது. 1972 சேசம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை செல்லாது, ஆனால் ஆகமப்படி தான் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை நிலைநாட்டியதே தவிர அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
அன்று இது தீண்டாமை, சமத்துவத்துக்கு எதிரானது, சிவில் சட்ட உரிமைக்கு எதிரானது போன்ற வாதங்கள் வைக்கப்படவில்லை, 206 அர்ச்சகர் பயிற்சிபெற்ற சூத்திர மாணவர்கள் வேலைக்காக காத்திருக்கவில்லை. ஆனால் 2016-ல் இவை அனைத்தும் இருந்தன. நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதை தீண்டாமை என ஏற்கமுடியாது. ஏனெனில் அவர்கள்”இன்னின்னார் தான் வரவேண்டும் என்கிறார்களே தவிர இன்னின்னார் வரக்கூடாது” என சொல்லவில்லை என்று நரித்தனமாக வியாக்கியனம் செய்கிறது. இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் இடமளிக்கிறது. இப்படி தான் இரட்டைக்குவளை முறையும், மற்ற தீண்டாமை பழக்கங்களும் நடைபெறுகின்றன. அவற்றையும் இந்தத் தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.
தமிழக அரசு இயற்றிய எந்த இந்துவும் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை இந்தத் தீர்ப்பு ரத்து செய்யவில்லை. அதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம், இது வெற்றி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஆகம விற்பன்னர் சக்திவேல் முருகனாரும் கூறி வரவேற்கின்றனர். தீர்ப்பின் இன்னொரு பகுதி ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராகவும் நீதிமன்றம் செல்ல்லாம் என சொல்லியிருப்பதையும், உண்மையில் வெற்றி என்றால் தமிழக அரசாணைக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறக்கணிக்கின்றனர்.
மேலும் இந்த தீர்ப்பு ஆகமத்தை கடைபிடிக்க சொல்கிறது. ஆகமம் என்பது மூணு சீட்டு விளையாட்டு போல, ஒரு மோசடி. அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பனர்கள் சொல்வது ஆகமம் என்ற நிலை உள்ளது. 2002-ல் ஆதித்தன் வழக்கில் நம்பூதிரிகள் தான் அர்ச்சகராகலாம் என்ற மரபை மீறி ஈழவர் சாதியை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராகலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட்து. அதை சுட்டிக்காட்டி வாதிட்டால் அது சாதி தீண்டாமை பிரச்சினை. இந்த வழக்கில் அப்படியில்லை என நீதிபதிகள் மறுக்கின்றனர். ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகராக வேண்டும் என்று இல்லை. ஆகமம் மாற்றப்படக்கூடாது என்கிறது. ஆகமம் என்பது கோயில் கட்டமைப்பை, வழிபாட்டுமுறையை குறிப்பிடுவது. அந்த ஆகமம் இப்போது ஆகமக் கோயில் என சொல்லக்கூடிய எந்தக் கோயிலிலும் கடைபிடிக்கவில்லை. உதராணமாக கருவறையில் மின்விளக்கு போடுவது, கோயிலை நள்ளிரவிலும் திறந்து வைப்பது. என சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பு தமிழக வெற்றியா? இல்லையா? என ஆராய நீதிபதி கமிட்டி போடும் அவலம் நடந்தது. அப்படிபோட்ட மூன்று கமிட்டிகளும் ஆகமம் எந்த கோயிலிலும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ள 116 பார்ப்பனர்களில் 28 பேர் தான் அர்ச்சகராக பயிற்சி பெற்றவர்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த்து. இது தான் மற்ற கோயில்களின் நிலையும்.
இந்துக்களின் ஒற்றுமை, சமத்துவம் பேசுகின்ற ராம.கோபாலனோ, இல. கணேசனோ இந்த 206 அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் உரிமைக்காக கருவறை தீண்டாமையை ஒழிக்கவும் போராடவில்லை. இந்து மத நம்பிக்கையில்லாத, அதன் புராணங்களை எரிக்க வேண்டும் எனக்கூறுகின்ற மக்கள் கலை இலக்கிய கழகமும் பெரியாரிய அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. முன்பு தாழ்த்தப்பட்டவர்கள், சூத்திர்ர்கள் கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற தீண்டாமையையும் எதிர்த்து கோயில் நுழைவு போராட்டங்களை நட்த்தியது அம்பேத்காரிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தான்.
ஆகமம் இந்து மத நம்பிக்கை அதன்படி செயல்படவேண்டும். அதை மீறுவது அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கும் மத நிறுவனங்களின் உரிமை பறிப்பது என வாதிடுகின்றனர். நம்பிக்கை என்பது நடைமுறைக்கு வரும் வரை தான், வந்துவிட்டால் அந்த செயல் சட்டத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என எண்ணுவது குற்றமல்ல. அதுவே அரிவாளை எடுத்து ஓங்கிவிட்டால் அது தண்டனை சட்டம் 307-படி கொலைமுயற்சி குற்றச் செயலாகும். அது காஞ்சி கோயிலில் வைத்து சங்கராச்சாரி செய்தாலும் பொருந்தும்.
பார்ப்பானை தவிர யாரும் அர்ச்சகரானால் சாமி தீட்டு ஆகிவிடும். மற்ற சாதியினர் அர்ச்சகராகக் கூடாது என்றால் சரி அப்படியே இருந்துவிட்டு போகட்டும். எங்களுக்கு தட்டும் வேண்டாம் மணியும் வேண்டாம். பார்ப்பன அர்ச்சகர் வேலையை தவிர IAS ,IPS, வெளிநாட்டு வேலை என எதற்கும் போகக்கூடாது. அனைத்து பார்ப்பனர்களும் அர்ச்சகராக மட்டுமே இருக்க வேண்டும் என நாங்கள் கூறினால் உரிமை பாதிக்கப்பட்டதாக வர மாட்டார்களா? 63 நாயன்மார்கள் விதவிதமாக கடவுளை வணங்கினார்கள் எனக்கூறுகிறது புராணங்கள். அதை மட்டும் எப்படி ஏற்கிறார்கள்?
ஆகமம் தான் பெரிது என இராம.கோபாலன், எச். ராஜா சொன்னால் பிரச்சினையில்லை. இந்திய மக்களின் சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்ற நீதிபதிகள் பேசுவது தான் பிரச்சினை. நீதிபதி மக்களுக்காகவா? மக்கள் நீதிபதிகளுக்காகவா? என்ற கேள்வி எழுகிறது.
மக்களுக்காக தான் நீதிபதிகள் அது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கத் தான் மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரி, MLA, MP, அமைச்சர்கள். இதற்கெதிராக உங்களை தூக்கியெறியும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.
நீங்கள் அரசு இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் மக்களின் இறையாண்மை பற்றி பேசுகிறோம்.
ஏனெனில் நீதிம்ன்றம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை திருத்தி விளை நிலங்களாக மாற்ற உதிரத்தையும் உயிரையும் கொடுத்த்து உழைப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளிகள். அந்த மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள், மக்கள் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகராத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.
இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் கலைசெல்வன் நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்.
தொடர்புடைய பதிவுகள்
Subscribe to:
Posts (Atom)