Saturday, August 4, 2018

“கழகச் செயல் தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு"

*“கழகச் செயல் தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு"*

இன்று (02-08-2018) கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்ற சட்டத்தினை தலைவர் கலைஞர் அவர்கள் பிறப்பித்ததன் விளைவால் சமீபத்தில் மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


அப்போது, முறையாக பயிற்சி பெற்ற மீதமுள்ள 205 பேருக்கும் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணி கிடைக்க எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்