Tuesday, April 3, 2012

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்? ஓர் அலசல் - BBC TAMIL


மீடியா பிளேயர்


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஏப்ரல், 2012 - 17:36 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

போராட்டத்தையே நம்புகின்றனர் பயிற்சிபெற்ற மாணவர்கள்
போராட்டத்தையே நம்புகின்றனர் பயிற்சிபெற்ற மாணவர்கள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள், ஆலயங்களில் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை குறித்து ஆராயும் பெட்டகம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்ட விரும்புவோர் அனைவருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்கும் திட்டம் ஓராண்டு மட்டுமே நடைமுறையில் இருந்தது.
                  http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/04/120402_allcastepriest.shtml
இத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு நான்கு வேறு இடங்களில் சைவமுறை வழிபாட்டுப் பயிற்சியும், இரு இடங்களில் வைணவமுறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஆனால் அத்தகைய பயிற்சிக்கு வழிசெய்த திமுக அரசின் அரசாணை ஆகமவிதிகளுக்கு முரணானது என்றும், ஆகமத்தால் அனுமதிக்கப்படாதவர்கள் நுழைந்தால் கருவறையே தீட்டுப்பட்டுவிடும் என்றும் சிவாச்சாரியார்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.
அரசு திட்டத்தில் பயின்றவர்கள் சிறு ஆலங்களில் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்ற முடிந்துள்ளது
அரசு திட்டத்தில் பயின்றவர்கள் சிறு ஆலங்களில் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்ற முடிந்துள்ளது
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அரசு ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதன் விளைவாக விரும்புவோருக்கு அரசே பயிற்சியளிக்கும் திட்டமும் கைவிடப்பட்டது.
நீதிமன்றத்தடை காரணமாக, பயிற்சி முடித்த 200க்கும் மேற்பட்டோர் எவருக்கும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஆலயங்களில் அர்ச்சகர் வேலை தரப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்திலோ வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது.
இந்நிலையில் பயிற்சி பெற்ற மாணவர்களில் சிலர் ஆங்காங்கே தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு சிறு ஆலயங்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுகின்றனர்.
அவ்வாறு வாய்ப்புகிடைக்காதவர்கள் பல்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டார்கள்.
அவர்களின் நிலை குறித்து ஆராயும் சென்னை நிருபர் டி.என்.கோபாலனின் சிறப்பு பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.



No comments:

Post a Comment