தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சக பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அந்த பயிற்சி நிலையங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட 260 மாணவர்கள் பயிற்சியை முடித்தனர். அதனால் இவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கக்கூடாது என மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இதனால் அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் தங்களை அர்ச்சககர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டும், தொடர்ந்து அர்ச்சக பயிற்சிப்பள்ளியை நடத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்களது கோரிக்கை வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 6 அர்ச்சக பயிற்சி மாணவர்களூம் இணைந்து தமிழ்நாடு அர்ச்சக மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் துண்டு பிரசுரங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனை பொதுமக்களூக்கு தெரியப்படுத்த தமிழகம் முழுவதும் துண்டுபிரசுரங்களை கொடுத்து வருகின்றனர்.
இரண்டு நாட்களூக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் முன்பு நின்றபடி அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ரங்கநாதன் தலைமையில் மாணவர்கள் துண்டு பிரசுரங்களை தந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகிகள் எங்களூக்கு எதிர்ப்பாக போராட்டம் இனியும் செய்தால் வீடு புகுந்து அடிப்போம் என எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து அர்ச்சக மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் பாண்டியனிடம் புகார் தெரிவித்தனர். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் நேற்று மாநிலத்தலைவர் ரங்கநாதனை பேருந்து நிலையம் அருகே அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டதால் தப்பிவிட்டனர்.
பின்னர் ரங்கநாதனின் வீட்டிற்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார் ரங்கநாதன்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment