Friday, February 1, 2013

அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !

கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.

30.1.2013 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகளை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.
2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட 206 மாணவர்களை, அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன அரச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கை நடத்தக்கூடாது என்று வேண்டுமென்றே இழுத்தடித்தனர். திமுக அரசும் நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்போது அம்மா ஆட்சி வந்துவிட்டது.
பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகமாக ஒரு தீர்வு காண இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. சுமுகத்தீர்வு என்பதன் பொருள் என்னவென்றால், சீரங்கம், மதுரை, மயிலை உள்ளிட்ட ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை நியமிக்காமல், அவர்களுக்கு மற்ற மாரியாத்தா, காளியாத்தா கோயில்களை ஒதுக்கிவிடுவது என்பதே. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, வழக்கெல்லாம் வேண்டாம், வேலை போட்டுத் தருகிறோம் என்று ஆசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் வாதி (petitioner) மதுரைக் கோயில் அர்ச்சகர்கள்; பிரதிவாதி (Respondent) தமிழக அரசு. இதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தலையீடு செய்து தன்னையும் வழக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கை மனித உரிமைப் பதுகாப்பு மையம் நடத்துகிறது
ஜனவரி 30 ஆம் தேதியன்று வழக்கின் இறுதி விசாரணை தொடங்கிவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதுரைகளை முன்வைக்கத் தொடங்கி விட்டார். தமிழக அரசின் சார்பில், அம்மாவின் வழக்குகளுக்கு ஆஜராகும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார்.
சம்பிரதாயமா, மதச்சார்பற்ற சட்டமா (ceremonial law or secular law)  என்றால் சம்பிரதாயமே மேல்நிலை வகிக்கும். இதுதான் அரசியல் சட்டத்தின் நிலை. திமுக அரசு போட்டிருக்கும் அரசாணை, உரிய சட்டத்தின் துணை இல்லாமல் போடப்பட்டிருப்பதால் அது செல்லத்தக்கதல்லை. அவ்வாறு ஒரு சட்டமியற்ற முடிந்தால் இயற்றிக் காட்டட்டும், நான் உடைத்துக் காட்டுகிறேன். அது அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கு எதிரானது. எனவே செல்லத்தக்கதல்ல” என்று கூறி தனது வாதத்தை தொடங்கியிருக்கிறார் பராசரன்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 இன் கீழ் தம.து சாதி உரிமையையே இந்து மத உரிமையாக கோருகின்றனர் பார்ப்பனர்கள். அதாவது, சமூக நடவடிக்கைகளில் குற்றமாக்கப்பட்ட தீண்டாமையை, மத ரீதியில் தமது உரிமை என்று கூறுகின்றனர்.
மிகவும் கடினமான சவாலான இந்த வழக்கை பெரிதும் கஷ்டப்பட்டு இறுதி நிலைக்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம். வலிமையான முன்னணி வழக்குரைஞர்கள் பட்டாளம் ஒன்றை நிறுத்தி நடத்தப்பட வேண்டிய அளவுக்கு சிக்கலான சவாலான வழக்கு இது.
அப்படிப்பட்ட வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டுமானால், நமது தரப்பில் நியமிக்க வேண்டுமானால் பல இலட்சங்கள் தேவை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது. வாய்தாக்களுக்கு அலைந்தும், வாய்தாவை ஆட்சேபிக்க அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்கு கட்டணம் கொடுத்துமே சில இலட்சங்கள் போய் விட்டன.
இந்து சட்டத்தின் மோசடித்தன்மையை, இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மையை அம்பலப் படுத்துகின்ற வாய்ப்புகளை கொண்ட வழக்கு இது. கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
இவ்வழக்குக்கு நன்கொடை தாருங்கள் என்று கோருகிறோம். நன்கொடையை அளிக்க விரும்புகிறவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________________________________
- வினவு
 ____________________________________________________

ஆர்ப்பாட்ட செய்தித் தொகுப்பு:

தலைமை உரை :
செ.அ. சுரேசு சக்தி முருகன்,
இணை செயலாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்.
40 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன சாதிய கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாக கருவறையில் நிலவும் தீண்டாமைக்கு எதிராகவே இப்போராட்டம். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கு இறுதி விசாரணையில் இருக்கிறது. வழக்கினை தொடர்ந்த பார்ப்பனர்களோடு தமிழக அரசு சமரசமாக பேசிக் கொள்வதாக கூறி செய்யப்பட்டு வரும் பார்ப்பன சூழ்ச்சியினை அம்பலப்படுத்துவதற்காகவே இப்போராட்டம்.
…. 2002ல் வெளிவந்த ஆதித்தியன் வழக்கு தீர்ப்பில் குறிப்பிட்ட உட்சாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னர், 2006ல் திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையையும், இந்து அறநிலைத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்ட திருத்தமும் கொண்டு வந்தது. அர்ச்சகர் பயிற்சியினை 206 மாணவர்களுக்கும் கொடுத்தது.
ஆகமப்படி பார்ப்பனகள் தவிர பிற சாதிக்காரர்கள் அர்ச்சகராகி சாமி சிலையை தொட்டு பூஜைகள் செய்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியாக்கள் அவசர சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெற்று 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் இன்றும் அர்ச்சகராக முடியவில்லை. திமுக அரசும் வழக்கினை விரைந்து நடத்த முயற்சிக்கவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக பின்புலமாக இருந்தது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதனை உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரராக இணைத்து வழக்கினை நடத்தி வருகின்றது. தற்பொழுது இவ்வழக்கு இறுதிவிசாரணைக் கட்டத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த விசாரணையின்போது அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்க்கப்பட வேண்டிருப்பது பார்ப்பனரல்லாதோருக்கு சாமி சிலையைத் தொட்டு பூசை செய்ய உரிமை இருக்கிறதா என்பதுதான். இது சொத்து தகராறோ அல்லது பணப்பிரச்சினையோ அல்ல. இது நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம் செய்துகொள்ள இயலாத காரியம். 2000 ஆண்டு காலமாக பார்ப்பனீயம் இது போன்ற சூழ்ச்சிகள் மூலம் தான் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இப்பார்ப்பன சூதை வெல்ல அனுமதித்தால் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இன்னும் பல ஆண்டுகள் நாம் சாதி இழிவை சுமக்க வேண்டியிருக்கும்.
ரங்கநாதன்,
மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.
2006 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்தார்கள். 2007-2008ல் பயிற்சி முடித்தோம். 2006ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசிவாச்சார்யர்கள் சங்கம் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் சங்கம் மற்ற சாதிக்காரர்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என்கிறார்கள்…
அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பலர் பல தனியார் கோவில்களில் பூசை செய்துவர்றாங்க. தீட்டாகவில்லை. தமிழக அரசு விரைந்து வழக்கினை முடிக்க வேண்டும். மதுரை ஆதிசிவாச்சாரியார் சங்கத்துடன் பேசி சுமூக தீர்வு காணுகிறோம் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சென்ற மாதம் வாய்தா வாங்கி இருக்கிறார்.
. …நாங்கள் படித்த தகுதிக்கேற்ப பெரிய கோவில்களில் பணி நியமனம் வழக்கவேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் சாமி சிலைகளைத் தொட்டால் தீட்டில்லை, ஆனால் நாங்கள் தொட்டா தீட்டாகுமா. கோவில் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழக அரசு தகுதிக்கேற்ப பணிநியமனம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயலாளர் கண்ணன்
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கப் போகிறேன் என்று கலைஞர் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகும் சட்டத்தை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தார். …பட்டர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் கலைஞர் பின்வாங்கிவிட்டார். மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாணவர்களை சந்தித்து, ஒவ்வொரு ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கினோம்.
இவர்கள் தீண்டாமையை ஒழிக்கக் கற்றவர்கள். பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறுசிறு கோவில் வேலை செய்கிறார்கள். தடையாணை பெற்ற பார்ப்பனர்களிடமே வேலைப் பார்ப்பது வேதனை எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தால் மக்கள் மன்றம் முன் இப்பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.விடமாட்டோம்.
வெற்றி வேல் செழியன்,
மாநில அமைப்பு செயலாளர்,
பு.ஜ.தொ.மு
தொழிற்சங்கம் என்றால் தொழிலாளர் பிரச்சினை, சம்பள உயர்வு போராட்டத்திற்கு போவோம் என்று நினைப்பார்கள். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறேன்.
மற்ற சாதிக்காரங்க கருவறையில் போனால் சாமி வெளியேறிவிடும் என்று சொல்கிறார்கள். தேவநாதன், ஜெயேந்திரன் பண்ண அட்டூழியங்களில் கோவில் இடிந்து வீழ்ந்தல்லவா இருக்கவேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பனர்களின் யோக்கியதையை பற்றி அக்கோயிலுக்கு அருகில் உள்ள சாதாரண மக்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.
தின்று தின்று கொழுத்த கோவில் பூஜை செய்யும் பார்ப்பனர்களை காண்ராக்டர்களிடம் வேலைக்கு விட்டால் முதுகெலும்பை உருவி தொங்க விட்டு விடுவார்கள்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன்
இந்தியாவை மனுசாஸ்திரங்கள் பிடித்துக்கொண்டு ஆட்டுகின்றது. அர்ச்சகருக்கு படித்தாலும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்னுமளவிற்கு மனுதர்மம் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற செந்தில்
பார்த்தசாரதி கோயிலில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டம் மூலம் 32 மாணவர்கள் பயின்றோம். தினமும் காலையில் நித்ய அனுஷ்டானங்கள் செய்தோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி விளம்பரத்தைப் பார்த்து அர்ச்சகராகும் நோக்கில் வந்தோம். அந்த வேலையில் திருவண்ணாமலை திரௌபதி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தேன். நாங்கள் ஒரு வருடமாக பயிற்சி பெற்றோம். மேலும் 6 மாதம் நீட்டித்தார்கள். அப்போதே சந்தேகம் வந்ததது. பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டி இருந்தது. திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள். காஞ்சிபுரத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று கூறியும் வெகு நேரம் காக்க வைத்து தான் பதிவு செய்தார்கள். நாங்கள் அர்ச்சகராக வேண்டுமென்று முடிவளர்த்து, மாலை போட்டு போகும் போது எங்களை கேலிக்குரியவர்களாகவே பார்த்தார்கள்.
தஞ்சையில் ஒரே குருக்கள் மூன்று கோவில்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை. எங்களுக்கு அர்ச்சகராகும் நியமன வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திரு.வி.வி.சுவாமிநாதன்,
முன்னாள் அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறை.
தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு செய்த போது அதை எதிர்த்து போராடியதற்காக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அப்போது சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்தேன். நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிளை சிறையில்தான் அடைக்கப்பட்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் மற்றவர்களுக்காகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதற்காகதான் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியை இழந்த்து. தமிழகத்தில் தமிழுக்காக பலபேர் போராடி உயீர்நீத்தனர்.
கோவிலில் தமிழ் போகலாம் தமிழன் போக்கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். இந்தியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம் போல் கருவறை தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டம் எழும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன். எனக்கு 87 வயதாகிறது. இத்தகைய போராட்டங்களில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றாமல் திரும்ப பெற்றுவிட்டார். திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.அதற்கு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் முழுமையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பழக்க வழக்கம் என்ற பெயரில் கருவறையில் தீண்டாமையை எப்படி கடைபிடிக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு பழக்க வழக்கம் என்பது சமத்துவத்திற்கு எதிராக இருந்தால் அது செல்லாது என 2002 உச்சநீதிமன்றம் ஆதித்தியன் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது மதுரை சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு தடை வாங்கியுள்ளனர். தமிழக அரசு சமுக தீர்வு என்ற பெயரில் நமது சமூக நீதியை விட்டு கொடுத்துவிடக்கூடாது. மக்களும் கருவறையில் தமிழன் நுழைய வேண்டும் என்ற போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடக்க வேண்டும் என கூறி பேச்சை முடித்தார்.
வழக்குரைஞர் சி.ராஜு,மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2006 திமுக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக மதுரை சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்த்தரவு பெற்றனர். அதன் இறுதி விசாரணை நாளை 31-1-13 அன்று வர இருக்கிறது.
பயிற்சி முடித்த மாணவர்கள் 206 பேருக்கு ஏதாவது ஒதுக்குப்புற கோவில்களில் பணி நியமனம் கொடுத்து விட்டு கருவறை தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அப்படியே விட்டு தப்பித்து விடலாம் என தமிழக அரசு செயல்படுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
மக்கள் அரசின் அங்கம், நாம் உரிமைக்காக போராடினால்தான் அரசு சரியானபடி செயல்படும்.1970 பெரியார் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்த போது அன்றைய திமுக அரசாங்கம் பெரியாரை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்று அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டம் நிறைவேற்றியது. நேராக உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள் சாதகமான உத்தரவை பெற்றனர். வாரிசுரிமையை ஒழித்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் உன உச்சநீதிமன்றம் சொன்னது. அதே நேரத்தில் அர்ச்சகர் நியமனத்தில் பழக்கவழக்கம், ஆகமத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழக அரசு வழக்கறிஞர் ஒத்துக் கொண்டார். பல சட்ட வல்லுனர்கள் இன்றும் இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம் என சொல்ல முடியாத குழப்பமான தீர்ப்பு. ஆனால் பெரியார் அன்று 1972 –ல் இந்த தீர்ப்பு பற்றி கூறும்போது ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம் என்று மிக நுட்பமாக தெளிவுபடுத்தினார். இலைமறையாக இருந்த நம்மீதான சாதி இழிவினை இந்த தீர்ப்பு பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி காட்டிவிட்டது என்றார்.
40 ஆண்டுகால போராட்டத்தின் தொடர் ஓட்டச் சுடர், இன்று நம் தலைமுறையில் நம் கையில் இருக்கிறது. அய்யா வி.வி.சாமிநாதன் அவர்கள் சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழ் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்திலும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போராட்டத்திலும் இறுதிவரை நம் உடன் இருந்தவர். பார்ப்பனர்கள் முதலில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவார்கள், பிறகு அரசில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வார்கள். இதுதான் காலம் காலமாக பார்ப்பனர்கள் செய்யும் பித்தலாட்டம்.1982-ல் நடராசர் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என போட்ட உத்தரவு, 2008-ல் நாங்கள் ஆறுமுகச்சாமியை தரப்பினராக சேர்ந்து பொதுக்கோவில் என்று சொல்லி வெற்றி பெற்றோம். பொதுக்கோவில் என்ற உண்மையை நாங்களா கண்டுபிடித்தோம். அரசு ஏன் செய்யவில்லை. நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று உண்டியல் வைக்கபட்டுள்ளது. பலகோடி வருவாயை ஈட்டி உள்ளது.
அது போல் உச்ச நீதிமன்றத்தில் 1972-ல் நடந்த பார்ப்பன சூழ்ச்சி இன்று நடக்காது. பெரியாரின் வாரிசுகளாக இன்று சட்டம் படித்த எங்களைப் போன்றோர் இதை மக்கள் மத்தியிலும் பேசுகிறோம். உச்சநீதிமன்றத்திலும் பேசுவாம். கருவறை தீண்டாமைக்கு எதிராக இம்முறை அரசு மட்டுமல்ல, மக்கள் சார்பில் நாங்களும் வாதாட இருக்கிறோம். ஆகமத்தை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என உறுதியாக நாங்கள் போராடினால் பல கோயில்களை இழுத்து பூட்ட வேண்டியிருக்கும். மதுரையில் மொத்தம் உள்ள 116 அர்ச்சகரில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மீதி பேர்கள் உதவிக்கு போன அப்ரண்டீசுகள் தான், அப்படியே காலப் போக்கில் அர்ச்சகராகனவர்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன், சிவலிங்கம், பெருமாள் ஆகிய மூன்று கடவுள்களுக்கு ஒரே சிவாச்சாரியரே பூசை செய்கிறார். சிவன் பெருமாள் அர்ச்சகர் எப்படி வைணவக் கடவுளுக்கு எப்படி அர்ச்சகராக முடியும்.  முக்கியமாக ஆகமத்தில் கால பூசையை பற்றி தான் கூறுகிறது. என் பெயர், நட்சத்திரம், கோத்திரம் கூறி ஒரு அர்ச்சனை பண்ணுங்க சாமி என்ற நடைமுறையே எந்த ஆகமத்திலும் கிடையாது. கலக்சனுக்காக மாறிய ஆகமத்தை தீண்டாமையை ஒழிக்க மாற்றக் கூடாதா? கருவறையில் லைட், பேன், ஏ.சி. இதெல்லாம் எந்த ஆகமம் என அடுக்கி கொண்டே போகலாம். பார்ப்பானை தவிர பிற சாதியினருக்கு கொடிமர தரிசனம் தான், தாழ்த்தபட்டவர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கோபுர தரிசனம்தான் என ஆகமம் சொல்லியது. அரசியலமைப்பு சட்டம் அதனை மாற்றி எழுதியது, என்ன ஆயிற்று? அது போல் கருவறையில் பிற சாதியினர் வந்தால் என்ன ஆகும்?
1972 சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு அமுல்படுத்தியதா என்றால் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 1144 அர்ச்சகர்கள் அரசு கோவில்களில் உள்ளனர். இதில் 574பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் ரெக்கமண்டேசன் லட்டரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். நம் மாணவர்கள் முழுமையாக ஒன்றரையாண்டு காலம் அர்ச்சகர் படிப்பில் கடும் பயிற்சி பெற்று, தீட்சையும் பெற்றனர். சான்றிதழும் பெற்றுள்ளனர். பார்ப்பனர்களின் தகுதியும், அரசின் யோக்கிதையும் இவ்வளவுதான். தாசில்தார், குரூப் ஒன் வேலை போல அர்ச்சகர் வேலை மிக சிறப்பானது அரசாங்கம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என நாங்கள் போராடவில்லை. கருவறை தீண்டாமை இந்துமதத்தின் உரிமையாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என பார்ப்பனர்கள், இல்லாத ஆகமத்தை காட்டி உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். தீண்டாமை எந்த வடிவத்தில் யார் எங்கு கடைபிடித்தாலும் தண்டனைக்குரிய குற்றம் என முடிவு செய்யப்பட வேண்டும். வேலை பிரச்சினை அல்ல சொத்து பிரச்சினை அல்ல, நம்மானப் பிரச்சினை. பிறப்பின் சாதி இழிவை துடைக்கும் இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம்.
அன்று பெரியார் காலத்தில் அர்ச்சகர் பணியினை ஏற்க யாரும் இல்லை. இன்று கருவறையில் தீண்டாமையை ஒழிக்க அர்ச்சகமாணவர்கள் 206 பேர் நாங்கள் இருக்கிறோம் என பார்ப்பனருக்கு சவால் விட்டு நிற்கிறார்கள். நம் காலத்தோடு கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். அதற்கு எத்தகைய போராட்டத்தையும் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் போராட ஆதரவு தரவேண்டும்.
தலைமை உரை :
செ.அ. சுரேசு சக்தி முருகன்,
இணை செயலாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்.
40 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன சாதிய கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாக கருவறையில் நிலவும் தீண்டாமைக்கு எதிராகவே இப்போராட்டம். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கு இறுதி விசாரணையில் இருக்கிறது. வழக்கினை தொடர்ந்த பார்ப்பனர்களோடு தமிழக அரசு சமரசமாக பேசிக் கொள்வதாக கூறி செய்யப்பட்டு வரும் பார்ப்பன சூழ்ச்சியினை அம்பலப்படுத்துவதற்காகவே இப்போராட்டம்.
கருவறையில் நிலவும் தீண்டாமையை எதிர்த்து 1970ல் பெரியார் கருவறை நுழைவு போராட்ட்த்தினை அறிவித்தார். இதனால் அன்றைய திமுக அரசாங்கம் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேக்ஷம்மாள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இச்சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டப்படி சரியானது எனக் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், ஆகமப்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்து தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறிவிட்டது. 2002ல் வெளிவந்த ஆதித்தியன் வழக்கு தீர்ப்பில் குறிப்பிட்ட உட்சாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னர், 2006ல் திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையையும், இந்து அறநிலைத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்ட திருத்தமும் கொண்டு வந்தது. அர்ச்சகர் பயிற்சியினை 206 மாணவர்களுக்கும் கொடுத்தது.
ஆகமப்படி பார்ப்பனகள் தவிர பிற சாதிக்காரர்கள் அர்ச்சகராகி சாமி சிலையை தொட்டு பூஜைகள் செய்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியாக்கள் அவசர சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெற்று 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் இன்றும் அர்ச்சகராக முடியவில்லை. திமுக அரசும் வழக்கினை விரைந்து நடத்த முயற்சிக்கவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக பின்புலமாக இருந்தது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதனை உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரராக இணைத்து வழக்கினை நடத்தி வருகின்றது. தற்பொழுது இவ்வழக்கு இறுதிவிசாரணைக் கட்டத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த விசாரணையின்போது அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்க்கப்பட வேண்டிருப்பது பார்ப்பனரல்லாதோருக்கு சாமி சிலையைத் தொட்டு பூசை செய்ய உரிமை இருக்கிறதா என்பதுதான். இது சொத்து தகராறோ அல்லது பணப்பிரச்சினையோ அல்ல. இது நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம் செய்துகொள்ள இயலாத காரியம். 2000 ஆண்டு காலமாக பார்ப்பனீயம் இது போன்ற சூழ்ச்சிகள் மூலம் தான் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இப்பார்ப்பன சூதை வெல்ல அனுமதித்தால் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இன்னும் பல ஆண்டுகள் நாம் சாதி இழிவை சுமக்க வேண்டியிருக்கும்.
ரங்கநாதன்,
மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.
2006 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்தார்கள். 2007-2008ல் பயிற்சி முடித்தோம். 2006ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசிவாச்சார்யர்கள் சங்கம் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் சங்கம் மற்ற சாதிக்காரர்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என்கிறார்கள். ஆனால் மற்ற இடத்தில் கணபதி ஹோமம், கும்பாபிஷேகம், கோவில் பூஜை, வீடு புதுமனை புகுவிழா செய்து இருக்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பலர் பல தனியார் கோவில்களில் பூசை செய்துவர்றாங்க. தீட்டாகவில்லை. தமிழக அரசு விரைந்து வழக்கினை முடிக்க வேண்டும். மதுரை ஆதிசிவாச்சாரியார் சங்கத்துடன் பேசி சுமூக தீர்வு காணுகிறோம் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சென்ற மாதம் வாய்தா வாங்கி இருக்கிறார். வழக்கு 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்து 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சிறு சிறு கோவில்களில், கிராமப்புற கோவில்களில் மற்றும் தனியார் கோவில்களில் வேலை செய்துகொண்டு வருகிறார்கள். நாங்கள் படித்த தகுதிக்கேற்ப பெரிய கோவில்களில் பணி நியமனம் வழக்கவேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் சாமி சிலைகளைத் தொட்டால் தீட்டில்லை, ஆனால் நாங்கள் தொட்டா தீட்டாகுமா. கோவில் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழக அரசு தகுதிக்கேற்ப பணிநியமனம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயலாளர் கண்ணன்
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கப் போகிறேன் என்று கலைஞர் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகும் சட்டத்தை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தார். அதன்படி ஒரு கோவிலில் 40 மாணவர்கள் சேர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். திமுக ஆட்சியில் செல்லப்பிள்ளைகளாக இருந்தனர். பட்டர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் கலைஞர் பின்வாங்கிவிட்டார். மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாணவர்களை சந்தித்து, ஒவ்வொரு ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கினோம்.
மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்று இவர்கள் படிக்கவில்லை. பார்ப்பனர்கள் செய்வது போல சாமி சிலை பூஜை செய்ய வேண்டும். மந்திரம் ஓத வேண்டும். பெரிய கோவில்களில் பூஜை செய்ய வேண்டும் என்று கனவு கண்டனர்.
இவர்கள் தீண்டாமையை ஒழிக்கக் கற்றவர்கள். பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறுசிறு கோவில் வேலை செய்கிறார்கள். தடையாணை பெற்ற பார்ப்பனர்களிடமே வேலைப் பார்ப்பது வேதனை எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தால் மக்கள் மன்றம் முன் இப்பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.விடமாட்டோம்.
வெற்றி வேல் செழியன்,
மாநில அமைப்பு செயலாளர்,
பு.ஜ.தொ.மு
தொழிற்சங்கம் என்றால் தொழிலாளர் பிரச்சினை, சம்பள உயர்வு போராட்டத்திற்கு போவோம் என்று நினைப்பார்கள். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறேன். சாதிவெறி விஷம் போன்றது. புதிய ஜனநாயத்தில் வெளிவந்த ஆதிக்க சாதி எதிர்ப்பு கட்டுரைகள் பார்த்தபிறகு சங்கத்தில் இருந்தே தொழிலாளர்கள் சிலர் வெளியேறிவிட்னர். புஜதொமு தொழிற்சங்கம் எதற்கும் சமரசம் செய்யாத சங்கம். பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் சாதி வெறி ஒழிய வேண்டும் எனப் போராடும் சங்கம்.
மற்ற சாதிக்காரங்க கருவறையில் போனால் சாமி வெளியேறிவிடும் என்று சொல்கிறார்கள். தேவநாதன், ஜெயேந்திரன் பண்ண அட்டூழியங்களில் கோவில் இடிந்து வீழ்ந்தல்லவா இருக்கவேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பனர்களின் யோக்கியதையை பற்றி அக்கோயிலுக்கு அருகில் உள்ள சாதாரண மக்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.
தின்று தின்று கொழுத்த கோவில் பூஜை செய்யும் பார்ப்பனர்களை காண்ராக்டர்களிடம் வேலைக்கு விட்டால் முதுகெலும்பை உருவி தொங்க விட்டு விடுவார்கள்.
பார்ப்பனர்கள் காதில் சாதி வெறி ஊற்றுகிறார்கள், ராமதாஸ் ஆதிக்க சாதி வெறியால் தாழ்த்தப்பட்ட மக்கள் காதில் விஷம் ஊற்றுகிறார்.
வர்க்க ஒற்றுமையினை பிளவுபடுத்தும் சாதிவெறியை ஒழிக்க வேண்டும் என்று பு.ஜ.தொ.மு வலியுறுத்துகின்றது. மார்க்சிய-லெனினிய அரசியல் வலியுறுத்துகிறது.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன்
இந்தியாவை மனுசாஸ்திரங்கள் பிடித்துக்கொண்டு ஆட்டுகின்றது. அர்ச்சகருக்கு படித்தாலும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்னுமளவிற்கு மனுதர்மம் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது. அறிஞர் அண்ணா அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்ததது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற செந்தில்
பார்த்தசாரதி கோயிலில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டம் மூலம் 32 மாணவர்கள் பயின்றோம். தினமும் காலையில் நித்ய அனுஷ்டானங்கள் செய்தோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி விளம்பரத்தைப் பார்த்து அர்ச்சகராகும் நோக்கில் வந்தோம். அந்த வேலையில் திருவண்ணாமலை திரௌபதி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தேன். நாங்கள் ஒரு வருடமாக பயிற்சி பெற்றோம். மேலும் 6 மாதம் நீட்டித்தார்கள். அப்போதே சந்தேகம் வந்ததது. பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டி இருந்தது. திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள். காஞ்சிபுரத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று கூறியும் வெகு நேரம் காக்க வைத்து தான் பதிவு செய்தார்கள். நாங்கள் அர்ச்சகராக வேண்டுமென்று முடிவளர்த்து, மாலை போட்டு போகும் போது எங்களை கேலிக்குரியவர்களாகவே பார்த்தார்கள்.
தஞ்சையில் ஒரே குருக்கள் மூன்று கோவில்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை. எங்களுக்கு அர்ச்சகராகும் நியமன வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திரு.வி.வி.சுவாமிநாதன்,
முன்னாள் அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறை.
தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு செய்த போது அதை எதிர்த்து போராடியதற்காக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அப்போது சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்தேன். நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிளை சிறையில்தான் அடைக்கப்பட்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் மற்றவர்களுக்காகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதற்காகதான் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியை இழந்த்து. தமிழகத்தில் தமிழுக்காக பலபேர் போராடி உயீர்நீத்தனர்.
கோவிலில் தமிழ் போகலாம் தமிழன் போக்கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். இந்தியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம் போல் கருவறை தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டம் எழும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன். எனக்கு 87 வயதாகிறது. இத்தகைய போராட்டங்களில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றாமல் திரும்ப பெற்றுவிட்டார். திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.அதற்கு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் முழுமையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பழக்க வழக்கம் என்ற பெயரில் கருவறையில் தீண்டாமையை எப்படி கடைபிடிக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு பழக்க வழக்கம் என்பது சமத்துவத்திற்கு எதிராக இருந்தால் அது செல்லாது என 2002 உச்சநீதிமன்றம் ஆதித்தியன் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது மதுரை சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு தடை வாங்கியுள்ளனர். தமிழக அரசு சமுக தீர்வு என்ற பெயரில் நமது சமூக நீதியை விட்டு கொடுத்துவிடக்கூடாது. மக்களும் கருவறையில் தமிழன் நுழைய வேண்டும் என்ற போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடக்க வேண்டும் என கூறி பேச்சை முடித்தார்.
வழக்குரைஞர் சி.ராஜு,மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2006 திமுக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக மதுரை சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்த்தரவு பெற்றனர். அதன் இறுதி விசாரணை நாளை 31-1-13 அன்று வர இருக்கிறது. தமிழக அரசு இந்த பிரச்சினையில் நாங்கள் சுமூகத் தீர்வு காண இருக்கிறோம் என கூறிய நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. கருவறையில் எங்களைத் தவிர (பார்ப்பனர்கள்) பிற சாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும். சிலையிலிருந்து சாமி ஓடிவிடும் என்று வாதத்தின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தடை கொடுத்துள்ளது. அதில் சமரசம் எப்படி செய்து கொள்ளமுடியும். பயிற்சி முடித்த மாணவர்கள் 206 பேருக்கு ஏதாவது ஒதுக்குப்புற கோவில்களில் பணி நியமனம் கொடுத்து விட்டு கருவறை தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அப்படியே விட்டு தப்பித்து விடலாம் என தமிழக அரசு செயல்படுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
மக்கள் அரசின் அங்கம், நாம் உரிமைக்காக போராடினால்தான் அரசு சரியானபடி செயல்படும்.1970 பெரியார் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்த போது அன்றைய திமுக அரசாங்கம் பெரியாரை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்று அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டம் நிறைவேற்றியது. நேராக உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள் சாதகமான உத்தரவை பெற்றனர். வாரிசுரிமையை ஒழித்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் உன உச்சநீதிமன்றம் சொன்னது. அதே நேரத்தில் அர்ச்சகர் நியமனத்தில் பழக்கவழக்கம், ஆகமத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழக அரசு வழக்கறிஞர் ஒத்துக் கொண்டார். பல சட்ட வல்லுனர்கள் இன்றும் இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம் என சொல்ல முடியாத குழப்பமான தீர்ப்பு. ஆனால் பெரியார் அன்று 1972 –ல் இந்த தீர்ப்பு பற்றி கூறும்போது ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம் என்று மிக நுட்பமாக தெளிவுபடுத்தினார். இலைமறையாக இருந்த நம்மீதான சாதி இழிவினை இந்த தீர்ப்பு பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி காட்டிவிட்டது என்றார்.  அதோடு அரசியலமைப்பு சட்டம் சரத்து 26 தான் சாதி தீண்டாமையை இந்துமதத்தின் உரிமையாக அங்கீகரித்து உள்ளது.அதை ஒழிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தை எரித்து போராடினார். நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கில் சிறை சென்றனர். பலர் உயிர் விட்டனர்.
40 ஆண்டுகால போராட்டத்தின் தொடர் ஓட்டச் சுடர், இன்று நம் தலைமுறையில் நம் கையில் இருக்கிறது. அய்யா வி.வி.சாமிநாதன் அவர்கள் சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழ் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்திலும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போராட்டத்திலும் இறுதிவரை நம் உடன் இருந்தவர். பார்ப்பனர்கள் முதலில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவார்கள், பிறகு அரசில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வார்கள். இதுதான் காலம் காலமாக பார்ப்பனர்கள் செய்யும் பித்தலாட்டம்.1982-ல் நடராசர் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என போட்ட உத்தரவு, 2008-ல் நாங்கள் ஆறுமுகச்சாமியை தரப்பினராக சேர்ந்து பொதுக்கோவில் என்று சொல்லி வெற்றி பெற்றோம். பொதுக்கோவில் என்ற உண்மையை நாங்களா கண்டுபிடித்தோம். அரசு ஏன் செய்யவில்லை. நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று உண்டியல் வைக்கபட்டுள்ளது. பலகோடி வருவாயை ஈட்டி உள்ளது.
அது போல் உச்ச நீதிமன்றத்தில் 1972-ல் நடந்த பார்ப்பன சூழ்ச்சி இன்று நடக்காது. பெரியாரின் வாரிசுகளாக இன்று சட்டம் படித்த எங்களைப் போன்றோர் இதை மக்கள் மத்தியிலும் பேசுகிறோம். உச்சநீதிமன்றத்திலும் பேசுவாம். கருவறை தீண்டாமைக்கு எதிராக இம்முறை அரசு மட்டுமல்ல, மக்கள் சார்பில் நாங்களும் வாதாட இருக்கிறோம். ஆகமத்தை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என உறுதியாக நாங்கள் போராடினால் பல கோயில்களை இழுத்து பூட்ட வேண்டியிருக்கும். மதுரையில் மொத்தம் உள்ள 116 அர்ச்சகரில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மீதி பேர்கள் உதவிக்கு போன அப்ரண்டீசுகள் தான், அப்படியே காலப் போக்கில் அர்ச்சகராகனவர்கள். பூசையின் போது உரிய மந்திரங்களை சொல்லாமல் மாற்றி சொல்வது, திருப்பரங்குன்றத்தில் முருகன், சிவலிங்கம், பெருமாள் ஆகிய மூன்று கடவுள்களுக்கு ஒரே சிவாச்சாரியரே பூசை செய்கிறார். சிவன் பெருமாள் அர்ச்சகர் எப்படி வைணவக் கடவுளுக்கு எப்படி அர்ச்சகராக முடியும்.  முக்கியமாக ஆகமத்தில் கால பூசையை பற்றி தான் கூறுகிறது. என் பெயர், நட்சத்திரம், கோத்திரம் கூறி ஒரு அர்ச்சனை பண்ணுங்க சாமி என்ற நடைமுறையே எந்த ஆகமத்திலும் கிடையாது. கலக்சனுக்காக மாறிய ஆகமத்தை தீண்டாமையை ஒழிக்க மாற்றக் கூடாதா? கருவறையில் லைட், பேன், ஏ.சி. இதெல்லாம் எந்த ஆகமம் என அடுக்கி கொண்டே போகலாம். பார்ப்பானை தவிர பிற சாதியினருக்கு கொடிமர தரிசனம் தான், தாழ்த்தபட்டவர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கோபுர தரிசனம்தான் என ஆகமம் சொல்லியது. அரசியலமைப்பு சட்டம் அதனை மாற்றி எழுதியது, என்ன ஆயிற்று? அது போல் கருவறையில் பிற சாதியினர் வந்தால் என்ன ஆகும்?
இன்றைக்கு பங்காரு அடிகளார், ஏன் 206 மாணவர்களும் பல தனியார் கோவில்களில் இன்றும் அர்ச்சகர்களாக உள்ளனரே சாமி என்ன ஓடியா விட்டது? கருவறை ஏன் தீட்டுப்படவில்லை. எல்லாம் கலக்சன் வருமானம். முதலாளிகள் கூட தொழிற்சாலை கட்டுகிறான், பல சட்டங்களில் அனுமதி வாங்குகிறான். லாபம் பார்க்க பாடுபடுகிறான். ஆனால் மதுரை போன்ற கோவிலை கட்ட எத்தனை ஆண்டுகள் நமது மக்கள் கூலியின்றி வெறும் சோற்றுக்கு உயிரை விட்டு இரத்தம் சிந்தி கோவிலை கட்டினார்கள். பார்ப்பான் போய் உட்கார்ந்து கொண்டு ஆகமம் என்ற பெயரில் கோவிலை அபகரித்துக் கொண்டான். இந்து அறநிலையத்துறை சட்டப்படி அந்தந்த கோவிலின் வருமானத்திற்கு ஏற்ப அர்ச்சகர் வருமானம் கொடுக்கப்படும். அப்புறம் தினம் தோறும் ஆயிரக்கணக்கில் தட்டு கலக்சன். கோவில் சொத்து பிரசாதம். ஏன் நம் மாணவர்களை அர்ச்சகராக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று தெரிகிறதா? அரசு எப்போதும் பார்ப்பனர்களுக்கு முழு ஆதரவு.
1972 சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு அமுல்படுத்தியதா என்றால் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 1144 அர்ச்சகர்கள் அரசு கோவில்களில் உள்ளனர். இதில் 574பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் ரெக்கமண்டேசன் லட்டரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். நம் மாணவர்கள் முழுமையாக ஒன்றரையாண்டு காலம் அர்ச்சகர் படிப்பில் கடும் பயிற்சி பெற்று, தீட்சையும் பெற்றனர். சான்றிதழும் பெற்றுள்ளனர். பார்ப்பனர்களின் தகுதியும், அரசின் யோக்கிதையும் இவ்வளவுதான். தாசில்தார், குரூப் ஒன் வேலை போல அர்ச்சகர் வேலை மிக சிறப்பானது அரசாங்கம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என நாங்கள் போராடவில்லை. கருவறை தீண்டாமை இந்துமதத்தின் உரிமையாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என பார்ப்பனர்கள், இல்லாத ஆகமத்தை காட்டி உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். தீண்டாமை எந்த வடிவத்தில் யார் எங்கு கடைபிடித்தாலும் தண்டனைக்குரிய குற்றம் என முடிவு செய்யப்பட வேண்டும். வேலை பிரச்சினை அல்ல சொத்து பிரச்சினை அல்ல, நம்மானப் பிரச்சினை. பிறப்பின் சாதி இழிவை துடைக்கும் இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம்.
அன்று பெரியார் காலத்தில் அர்ச்சகர் பணியினை ஏற்க யாரும் இல்லை. இன்று கருவறையில் தீண்டாமையை ஒழிக்க அர்ச்சகமாணவர்கள் 206 பேர் நாங்கள் இருக்கிறோம் என பார்ப்பனருக்கு சவால் விட்டு நிற்கிறார்கள். நம் காலத்தோடு கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். அதற்கு எத்தகைய போராட்டத்தையும் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் போராட ஆதரவு தரவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

http://www.vinavu.com/2013/02/01/hrpc-chennai-sanctum-untouchability-demo/

IMG_5711.JPG
IMG_5721.JPG
IMG_5728.JPG
IMG_5731.JPG
IMG_5738.JPG
IMG_5746.JPG
IMG_5749.JPG
IMG_5764.JPG
IMG_5750.JPG
IMG_5767.JPG
IMG_5770.JPG
IMG_5772.JPG
IMG_5777.JPG
IMG_5779.JPG
IMG_5791.JPG

No comments:

Post a Comment