Sunday, March 24, 2013

ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர் நியமனத்துக்கு நீதிமன்றம் தடை

Dinamani

By  மதுரை
First Published : 21 March 2013 08:29 AM IST

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது
.
 திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன் தாக்கல் செய்த மனு: 
 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதான ஸ்ரீபாதம் பதவி உள்ளிட்ட 29 பணிகளுக்கு, கோவில் நிர்வாக அதிகாரி 2013 பிப்.13 இல் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
 
 காலிப் பணியிடங்களில் 9 பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டு இருந்தது. 

 அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு 2006 இல் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகப் பணிக்கான அறிவிப்பு, இந்த ஆணைக்கு முரணாக உள்ளது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், கோவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இது தொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment